கள்ளக்குறிச்சியில் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் செயல்படும் தமிழக ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.
உதகை ராஜ் பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றத்தையும் தமிழ்நாடு சட்டமன்றத்தையும் அவமதிக்கும் வகையிலும்,அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தையும் தமிழ்நாடு சட்டப்பேரவையும் அவமதிக்கும் வகையிலும் அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் செயல்படும் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.