திருச்சி:

பேங்காக்கிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவர் கடத்தி வந்த 9.9 கிலோ எடையுள்ள ஹைட்ரோபோனிக்ஸ் வகை கஞ்சா வை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது. கஞ்சாவை கடத்தி வந்த பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்