தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழுவினர் கோவை டாடாபாத் பகுதியில் “கள் பானைகளுடன்” அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலை பயன்படுத்தி தமிழகத்தில் பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும், கள்ளச்சாராய விற்பனை செய்யும் சமூக விரோதிகளுடன், கள் உற்பத்தில் செய்யும் விவசாயிகளை இணைத்து அவமானப்படுத்தக் கூடாது. தேங்காய்க்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கோவை டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உண்ணாவிரத போராட்டத்தில் கள் பானைகள், கள் இறக்க பயன்படுத்தும் பொருட்களுடன்   விவசாயிகள் கலந்து கொண்டனர்.