சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் பொள்ளாச்சி ஆழியார் ஆற்றல் மூழ்கி பலி
தடை செய்யப்பட்ட இடத்தில் இறங்கி குளித்ததால் பலி
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் பிசியோதெரபி நான்காம் ஆண்டு பயிலும் ஆண், பெண் உள்ளிட்ட மாணவர்கள் 25 பேர் கொண்ட குழுவினர் பொள்ளாச்சி பகுதிக்கு சுற்றுலா வந்ததாக தெரிகிறது.இந்நிலையில் இன்று காலை சுற்றுலா வந்த மாணவர்கள் தடை செய்யப்பட்ட ஆழியார் ஆற்றின் உள்ளே இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது.அப்போது மருத்துவ மாணவரான ஆண்ட்ரோ செரிப் (21),தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடியதாக தெரிகிறது.இதனைப் பார்த்த சக மாணவர்களான ரேவன் (21),மற்றும் தருண் (21) ஆகியோர் அவரை காப்பாற்ற சென்றதாக கூறப்படுகிறது.ஆனால் ஆற்றின் உள்ள நீரின் வேகத்தில் மூவரும் சிக்கியதாக தெரிகிறது.இதனை கண்ட சக மாணவர்கள் கூச்சலிட்டதை அடுத்து,அங்கு விரைந்த உள்ளூர் வாசிகள் ஆற்றில் இறங்கி மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் ஆற்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீட்கப்பட்டனர்.மீட்கப்பட்ட சடலங்கலை கோட்டூர் மற்றும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.சென்னையில் இருந்து சுற்றுலா வந்த மாணவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சக மாணவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.