காஷ்மீர் சம்பவம் எதிரொலி – டெல்லியில் இருந்து கேரளா செல்லும் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படையின் மோப்ப நாய் உதவியுடன் சோதனை.

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து, கோவை வழியாக கேரளா செல்லும் விரைவு ரயில், கோவை வந்தபோது,
ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே வெடிகுண்டு நிபுணர்கள்,ரயில்வே போலீசார் ரயில் பெட்டிகள் மற்றும் பயணிகள் உடைமைகளை மோப்பநாய் சேரனை கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.