காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டு கொன்ற சம்பவத்தை தொடர்ந்து கடல் வழியாக தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் செய்வதை தடுக்கும் பொருட்டு குமரி கடல் பகுதியில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் அதி நவீன விரைவு ரோந்து படகு மூலாமாக தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக குமரி சுற்றுலா தலத்தில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி கூண்டு பாலம் அமைந்துள்ள பகுதிகளில் ரோந்து படகுகள் மூலமாக தீவிர கண்காணிப்பு.
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகளை நேற்று முன்தினம் தீவிரவாதிகள் சுட்டு கொன்றார்கள். இந்த நிகழ்வு நாடு முழுவதும் மிக பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.இதனை தொடர்ந்து நாட்டில் பொது மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்கள், வழிப்பாட்டு தலங்கள், ரயில், பேரூந்து, விமான நிலையங்கள் ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு தீவிர சோதனைகளையும் நடைப்பெற்று வருகிறது.
இதனிடையே கடல் வழியாக இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் செய்வதை தடுக்கும் பொருட்டு குமரி கடல் பகுதியில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதி முழுவதும் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் அதி நவீன விரைவு ரோந்து படகுகள் மூலமாக தொலைநோக்கி கருவிகள் உதவியுடன் கடலில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருவதுடன் மிக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
குறிப்பாக காஷ்மீர் போல் குமரியும் உலக சுற்றுலா தலம் என்பதால் குமரி சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி கூண்டு பாலம் அமைந்துள்ள பாறைகளை சுற்றிலும் படகுகள் மூலமாக ரோந்து பணி நடைப்பெற்று வருகிறது.மேலும் கடலோர பகுதிகளில் சந்தேகம் படும்படியாக மர்ம நபர்கள் தென்பட்டால் கடலோர குழும போலிஸாருக்கு தகவல் அளிக்கவும் கடற்கரை கிராம மக்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.