கல்பாக்கம் அணுசக்திதுறை வளாகம் மற்றும் அணுமின்நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு – ஊழியர்கள் நுழைவுவாயிலில் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுசக்திதுறை மையம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமாகும். இங்கு இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாவினி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்குகின்றன. மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் கல்பாக்கம் மைய வளாகத்தை பாதுகாப்பு பணிகளை மேற்க்கொண்டுவருகின்றனர்.


இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கி. சூடு நடத்தியதில் வெளி நாட்டினர் இருவர் உள்பட 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படையினர் அணுமின் நிலையம் முழுவதும் ரோந்து வருகின்றனர். பணிக்கு செல்லும் ஊழியர்கள் அனைவரும் அணுமின் நிலைய மெயின் கேட் நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் ஊழியர்கள் செல்லும் கார்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மோப்ப நோய் உதவியுடன் பரிசோதனை செய்யப்படுகிறது. ஊழியர்கள் கொண்டு செல்லும் பேக் உள்ளிட்டவை கடுமையாக பரிசோதிக்கப்படுகிறது.