மேட்டுப்பாளையம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் காட்டு யானை நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
யானைக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கோவை மண்டல வன பாதுகாவலர் நேரில் ஆய்வு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதிக்கு உட்பட்ட கூத்தாண்டி பிரிவு வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருப்பதால் கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் மட்டும் வன கால்நடை மருத்துவர் யானைக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள் நேற்று உயர் அதிகாரிகள் யானையின் உடல் நலம் குறித்து கால்நடை மருத்துவரிடத்தில் கேட்டறிந்தனர்
நேற்று மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்த யானை தொடர்ந்து மருத்துவர் ஆலோசனையின் படி வழங்கப்படும் மருந்துகளை வனத்துறையினர் பழங்களில் வைத்து கொடுத்து வருகிறார்கள் தொடர்ந்து இன்றும் மருந்துகளை வழங்கி சிகிச்சையை தொடர்ந்து வருகிறார்கள்.