திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விஜயகுமார் அவரது மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.
இதனையடுத்து கோயிலுக்கு வெளியே வந்த விஜயகுமார் செய்தியாளிர்களிடம் பேசுகையில் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் அவர் அழைப்பு இல்லாமல் வர முடியாது . பெருமாளின் தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்றார்.