பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள V.களத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று முற்பகல் 11 மணி அளவில் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் வானில் வட்டமிட்டபடி வானில் வலம் வந்துள்ளன. ஒரு கட்டத்தில் அந்த விமானங்கள் வழக்கத்திற்கு மாறாக மிகத் தாழ்வான உயரத்தில் அதிக சத்தத்துடன் பறக்க தொடங்கியுள்ளன. இதனை கண்ட கிராம மக்கள் முதலில் அச்சமடைந்தாலும் பிறகு அந்த விமானங்களை அன்னாந்து பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர். ஒரு சிலர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது பெரம்பலூரிலிருந்து சுமார் 85 கி.மீ தொலைவிலுள்ள தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விமான பயற்சித்தளத்
திலிருந்து அருகிலுள்ள கொள்ளிடம், மற்றும் காவிரி ஆற்று படுகைகளின் மேல் பயிற்சிக்காக வானில் வளம் வரும் விமானங்களில் சில உரிய சிக்னல் கிடைக்காததால் ஒரு சில நேரங்களில் இது போல் உள் மாவட்டங்களுக்குள் சென்று வான் வெளியில் பறப்பதுண்டு இதைக்கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்