
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது .
குறிப்பாக நட்சத்திரம் ஏரி பகுதியில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமான நிலையில் அப்பகுதியில் குதிரை சவாரி சைக்கிள் சவாரி படகு சவாரி போன்றவற்றை சுற்றுலா பயணிகள் அனுபவித்து செல்வது வழக்கமான நிலை ஒன்றாகும்.
இந்நிலையில் இன்று விருதுநகரில் இருந்து சுற்றுலாவிற்கு கொடைக்கானல் வந்த ஜெயராஜின் மகன் ஜோயல் கிப்சன் வயது 9 குதிரை சவாரி செய்து கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியை லாரி சத்தமாக ஒலி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குதிரை மிரண்டு துள்ளி குதித்து ஓடும் பொழுது சிறுவன் கீழே விழுந்துள்ளான் அப்பொழுது குதிரையின் கயிற்றை பிடித்து செல்லும் பொழுது சாலையில் இழுத்தபடி சென்றதால் சிறுவன் பலத்த காயம் அடைந்தான்.
அப்பகுதியில் அப்பகுதியில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டன
இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.