தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் காங்டி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் நடைபெற்ற ஒரு கண்காட்சிக்கு தனது தாத்தாவுடன் சென்ற 10 வயதான வினய் ரெட்டி ₹ 300 கொடுத்து அங்கு சந்தையில் இருந்த பொம்மை ஹெலிகாப்டரை வாங்கினார். அது பறக்காததால் அவர் இரண்டாவது முறையாகச் சென்று ஹெலிகாப்டரைக் கொடுத்துவிட்டு வேறு ஒரு பொம்மையைப் பெற்றார்.

அதுவும் பறக்காததால் மூன்றாவது முறையும் சென்றான் உரிமையாளர் அவனுக்கு வேறு ஒன்றைக் கொடுத்தார். மூன்றாவது முறை கொடுத்த ஹெலிகாப்டரும் பறக்காததால் அவர் பொம்மையைத் திருப்பித் தரச் சென்றார். ஆனால் கடை உரிமையாளர் பொம்மையை வாங்க மறுத்து விட்டார்ம் இதனால் வினய் ரெட்டி கோபமடைந்தார் நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று கடை உரிமையாளர் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தான்.
சிறுவனின் புகாரின் அடிப்படையில், எஸ்.ஐ. ஒரு கான்ஸ்டபிளை சந்தைக்கு அனுப்பினார். ஆனால் கடை உரிமையாளர் ஏற்கனவே சந்தையை முடித்து சென்று விட்டார். இதனால் சிறுவனின் தாத்தாவை வரவழைத்த போலீசார் சிறுவன் வினய் ரெட்டியை அழைத்து செல்லும்படி அனுப்பி வைத்தனர்.