கோவை

கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்வி கட்டண உயர்வை கண்டித்தும், மாணவர்களை பாதுகாக்க கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பாரதியார் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆராய்ச்சி சுருக்க உரை, முழு ஆய்வு அறிக்கை மற்றும் மறு ஆய்வு அறிக்கை சமர்பிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

முன்னதாக கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மாணவர்களை பாதுகாக்க கோரியும் கோசங்களை எழுப்பினர்