அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தில் விவசாயியிடம் நான்கு மால் அளந்து சான்றிதழ் வழங்குவதற்காக ரூபாய் 5,000 லஞ்சம் பெற்ற விஏஓ இப்ராஹிம் தலையாரி சிங்காரம் இருவர் கைது- மாறுவேடத்தில் மறைந்திருந்த விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி நடவடிக்கை.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் கல் ஊன்றி சர்வேயர் மூலம் அளந்து நான்கு மால் அளந்து சான்றிதழ் பெறுவதற்காக வதுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலர்
இப்ராஹீமை அணுகியுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் இப்ராகிம் மற்றும் தலையாரி சிங்காரம் இருவரும் சேர்ந்து சான்றிதழ் வழங்குவதற்காக ரூ 5,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சின்னத்தம்பி விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறையை நாடி உள்ளார். விருதுநகர் ஏடி.எஸ்.பி ராமச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழிகாட்டுதலின்படி விவசாயி சின்னத்தம்பி ரசாயனம் தடவப்பட்ட ரூ 5,000 பணத்தை வதுவார்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் இப்ராஹிம் மற்றும் தலையாரி சிங்காரத்திடம் வழங்கியுள்ளார்
அப்போது அங்கு மாறு வேடத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமாக பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.