கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள
தளவாபாளையம் பகுதியில் வேலாயுதம் பாளையத்தில் இருந்து கரூர் நோக்கி தனசேகர் என்பவர் ஓட்டி சென்ற மாருதி கார் திடீரென இன்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரிய துவங்கியது.

சுதாரித்த தனசேகர் காரில் இருந்து கீழே இறங்கி விட்டார்‌.

இந்த நிலையில் புகழுர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருந்தபோதிலும் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.