மேலும் போலீசார் விசாரணையில் மத்திய பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயம் என தெரிய வந்ததை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் முக்கிய மூன்று வழி சாலையாக போடி மெட்டு சாலை, கம்பம் மெட்டு சாலை, மற்றும் குமுளி சாலை அமைந்துள்ளது.

இந்தச் சாலைகளில் சோதனை சாவடிகளை அமைத்து போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கள்ளச்சாராயத்தை கடத்திச் செல்வதாக உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலினை தொடர்ந்து மூணாறு செல்லும் சாலையில் உள்ள முந்தல் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆம்னி வேன் வாகனத்தில் கேரளாவை சேர்ந்த கொரியன் என்பவர் ஆம்னி வேனில் ஏழு லிட்டர் கள்ளசாராயத்தை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஏழு லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் கடத்தி வந்த கள்ளச்சாராயம் மத்திய பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் கடத்திச் செல்வது என்பது தகவல் தெரிய வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு மத்திய பிரதேசத்தில் இருந்து கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கள்ளச்சாராயத்தை கடத்தி சென்ற சம்பவம் தேனி மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.