சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலக்குட பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பிற்கு பெட்ரோல் அடிக்க இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர் அவர்கள் ஒரு பையில் பட்டாசுகளை வைத்திருந்தனர்
பெட்ரோல் பம்ப் பணியாளர்கள் அந்த இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் அடித்துக் கொண்டு இருந்த
அப்போது திடீரென்று பட்டாசு பையில் உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதற ஆரம்பித்தது இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் அடிக்கும் பணியாளர்கள் உட்பட அனைவரும் சிதறி ஓடினார்கள் சுதாகரித்த இருசக்கர வாகன ஓட்டுநர் உடனடியாக இருசக்கர வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
இந்த விபத்தின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.