அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் சமத்துவமாக விளங்கும் அதிமுக, ஊழல் என்ற சகதியில் திமுக மூழ்கி விட்டது என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி. ஜெயராமன் பேட்டி.
திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் பகுதி செயலாளர மற்றும் வார்டு செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் துணை சபாநாயகரும் திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
திருப்பூர் மாநகர மாவட்ட இணைச் சயலாளர் சங்கீதா சந்திரசேகர் , திருப்பூர் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு, திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி போராட்டக் கண்ணப்பன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள் கேசவன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி ஜெயராமன் பேட்டியளிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் ஆணையின்படி கடந்த ஒரு மாத காலமாக பூத் கமிட்டி ஆய்வு மற்றும் பொறுப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது,
வரும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவடைந்து விடும், கழக உறுப்பினர்கள் அனைவரும் தேர்தலைச் சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறோம், ஊழல் என்ற சகதியில் திமுக மூழ்கி விட்டது, இனி யாராலும் திமுகவை காப்பாற்ற முடியாது, விரைவில் எம்ஜிஆர், அம்மா ஆட்சியை புரட்சித் தமிழர்.எடப்பாடியார் உருவாக்குவார் என்றும்,
எடப்பாடியாருடன் கூட்டணி வைத்தாலும், எந்த திசை காட்டினாலும் அதை நாங்கள் அனைவரும் கடைப்பிடிப்போம், கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று எடப்பாடியார் பலமுறை விளக்கம் அளித்துள்ளார், அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் சமத்துவமாக விளங்கும் அதிமுக என்றும், யாருடன் கூட்டணி வைத்தாலும் அதிமுகவின் கொள்கை மாறாது அதைத்தான் இஸ்லாமிய மக்களுக்கு நாங்கள் விளக்கிச் சொன்னோம் என்றும்,
பாஜகவை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அதிமுக அனைத்து மக்களுக்கும் பொதுவான கட்சி என்றும் கூறினோம், திமுக இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறது என்பதை தான் நாங்கள் விளக்கிச் சொன்னோம், தேர்தலில் வலுவான கூட்டணி பாஜகவுடன் அமைத்துள்ளோம் மேலும் பல கட்சிகள் வரவுள்ளது என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி. ஜெயராமன் பேட்டியளித்தார்.
முன்னதாக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் பேசுகையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ள வேண்டாம் என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் பேச்சு. கூட்டணியால் கலங்கி பேசிய மாநகராட்சி கொரடா கண்ணப்பன்.
அதிமுக பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் பேசுகையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது எனவும் இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம் எனவும் அதிமுக என்றும் உங்களுடன் துணை நிற்கும் என பேசினார்.
மேலும் மாநகராட்சி மாமன்ற எதிர்கட்சி கொரடா கண்ணப்பன் பேசுகையில் நாதழுதழுக்க குரல் உடைந்து கூட்டணி வைத்தது தங்களுக்கு வருத்தம் எனவும் இஸ்லாமியர்களுடன் அதிமுக துணை நிற்கும் என பேசினார். மூன்றாய் நான்காய் கட்சி உடைக்க பார்க்கின்றனர். நிர்பந்தம் காரணமாக கூட்டணி அமைந்துள்ளது என பேசினார்.