திருப்பூர்: வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் 263 பள்ளிவாசல் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்.
வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து திருப்பூர் ஐக்கிய ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பூரில் உள்ள அனைத்து பள்ளி வாசல் முன்பு பிற்பகல் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வக்பு சொத்துக்களை மத்திய அரசு கொள்ளையடிக்க முயல்வதாகவும் மத்திய அரசின் வெறுப்பு அரசியலையும் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் 263 பள்ளி வாசல்கள் முன்பும் இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.