திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் உள்ளது மேலும் இதே பகுதியில் உள்ள ஆதி விநாயகர் கோவில் க்குமலை முருகன் கோவில் வீரேஸ்வரர் கோவில் உட்பட ஏழு கோவில்கள் உள்ளது இந்த ஏழு கோவில்களுக்கும் இன்று ஒரே நாளில் மகா கும்பாபிஷேக பூஜை நடைபெற்றது இதனை முன்னிட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்ற தீர்த்த கலசங்களுக்கு யாக நீர் தெளித்து சக்தி ஊட்டினர்
மேலும் அம்மனுக்கு 1008 லிட்டர் பன்னீர் அபிஷேகம், 108 லிட்டர் தேன் அபிஷேகம், 234 திருப்பதி லட்டு அபிஷேகம், இந்தியா முழுவதும் இருந்து 234 தீர்த்த அபிஷேகம், உள்ளிட்டவை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏழு கோவில் கும்பாபிஷேகம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வை திரளாக கண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால் மங்களம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.