மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருக்காவூர் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரிவினரின் சுடுகாட்டை சுற்றி சுற்றுசுவர் மற்றும் மயான கொட்டையை அமைக்க பல ஆண்டுகளாக ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரம் சுற்றுச்சுவர் அமைப்பதை ஒரு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு சமூகத்தினரிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் ஒரு சமூகத்தினரின் சுடுகாட்டைச் சுற்றி சுவர் எழுப்புவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு பணிகள் நடைபெற்று வந்தது. அப்பொழுது ஒரு பிரிவினர் பணிகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்பொழுது போலீசருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து சீர்காழி திருமுல்லைவாசல் செல்லும் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்