3000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்று ரசித்தனர். 8 பேர் லேசான காயம்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பங்குனி பொங்கல் விழாவை கொண்டாடும் விதமாக கிராமத்தார்கள் சார்பில் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது. பெரிய கடைவீதியில் நடைபெற்ற இந்த இளவட்ட மஞ்சுவிரட்டில் மதுரை சிவகங்கை புதுக்கோட்டை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டகளிலிருந்தும் சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன முன்னதாக சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் இருந்து ஜவுளிகள் கொண்டு வரப்பட்டு கோவில் காளைகளுக்கு முதல்மரியாதை செய்த பின் கிராமத்தார்கள் இளவட்ட மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை கட்டு மாடுகளை கடை வீதியில் ஆங்காங்கே அவிழ்த்து விட்டனர். இதில் காளைகள் பார்வையளர்கள் கூட்டத்திற்கு மத்தியில் சீறிப்பாய்ந்து சென்றன. இதில் மாடு முட்டி 8 பேர் லேசான காயம் ஏற்பட்டது