இந்த காத்திருப்பு போராட்டத்தில் சிவகங்கை நகராட்சியில் பணிசெய்யும் தூய்மைபணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சொசைட்டிபணம், LIC பிரிமியம் தொகை, GPF தொகை, CPS பங்குதொகை உள்ளிட்ட 1 கோடியே 39 லட்சத்தை அந்தந்த துறைக்கு உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ஒப்பந்த மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 வழங்கிட வேண்டும், வருடக்கணக்கில் காலம் தாழ்த்துவதை கைவிட்டு
GPFகடன் தொகையை உடனே வழங்கிட வேண்டும்
தொழிலாளர்களின் பணிப்பதிவேடுவை முறையாக பராமரித்து உரிய காலத்தில் ஆய்வு செய்திட வேண்டும்,
துப்புரவு மேற்பார்வையாளர் பதவிக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், சாதிய பாகுபாடுடன் தூய்மை பணியாளர்களை அலுவலகப் பணிக்கு அமர்த்தியதை ரத்து செய்து, தூய்மை பணிக்கு அனுப்பிட வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் சீருடை காலணி, சோப்பு, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை உரிய காலத்தில் உடனே வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த போராட்டத்தில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.