கோவை

சாமியார் வேடத்தில் வெள்ளியங்கிரி மலை பகுதியில் பதுங்கியிருந்த நபர் காவல்துறையால் கைது
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நபரை இரண்டு ஆண்டுகளுக்கு பின் கைது செய்து போலிசார் நடவடிக்கை
கோவை வெள்ளியங்கிரி மலையில் 2 ஆண்டு சாமியார் வேடத்தில் பதுங் கிய-கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார். கோவை மாநகர பகு தியில் குற்ற வழக்குகளில் நீதிமன்றங்களில் விசார ணைக்கு ஆஜராகாமல் பிடிவாரண்ட் பிறப்பித்தும் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருக்கும் நபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தர விட்டுள்ளார். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நபர்களை பிடித்து நீதிமன் றத்தில் ஆஜர்படுத்த மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், கோவை காட் டூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு முதல் அன்னூரை சேர்ந்த மணிகண்டன் (42) என்பவர் போதை பொருள் தடுப்பு வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்தார். வழக்கின் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். பிடிவா ரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாகியிருந்த அந்த நபரை போலிசார் தேடி வந்தனர்.
சமீபத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன் பேரில் துணை போலீஸ் கமிஷனர் தேவ நாதன், உதவி போலீஸ் கமிஷனர் கணேஷ் மற்றும் காட்டூர் போலீஸ் இன்ஸ பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் மணிகண்டனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், மணிகண்டன் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கே சாமியார் போல அங்குள்ள சாமியார்களுடன் மணிகண்டன் பதுங்கி, அவ்வப்போது பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். பின் னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்ப வம் கோவையில் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிகண்டன் 2 வருடம் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது பக்தர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.