ஆன்லைன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள், காற்றாடி, பொம்மைகள், குழந்தைகளுக்கான டயாபர், வாட்டர் ஹீட்டர், சிசிடிவி கேமராக்கள், காலனி என சுமார் 4500 பொருட்கள் தரச் சான்று பெறாமல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய தர நிர்ணய அமைவினத்தின் கோயம்புத்தூர் அலுவலக அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டு தரச் சான்று இல்லாத பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 95 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.மேலும் வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆன்லைனில் வாங்கும்போது உரிய தரச் சான்று உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும் எனவும், ஐ எஸ் ஐ முத்திரை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், BIS Care எனும் மொபைல் செயலியை பயன்படுத்தி பொருட்களின் பதிவு சான்றிதழ் மற்றும் தரத்தினை வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.