திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா பெரமங்கலம் அருகே சமயபுரம் பூச்சொரித்தலுக்கு சென்று வந்த மினிடோர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் காயமடைந்தனர்.

சமயபுரம் கோயிலில் பங்குனி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் பூக்களை எடுத்துச் சென்று மாரியம்மனை வழிபட்டு வருவார்கள்.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் ,
துறையூர் பெரியார் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரு குழுவாக நேற்று இரவு சமயபுரம் மாரியம்மன் செட்டிங்ஸ் அலங்காரத்துடன் மினிடோர் ஆட்டோவில் சமயபுரம் கோவில் பூச்செரிதல் விழாவுக்காக சென்றனர். பூச்செரிதல் விழா முடிந்து இன்று துறையூர் திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது மினிடோர் ஆட்டோ பெரமங்கலம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது .

இதில் மினிடோர் ஆட்டோவில் பயணித்த 12 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற புலிவலம்
போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த இருவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 10 பேர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆட்டோ கவிழ்ந்து 12 பேர் காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.