தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வடக்கு மூனாண்டிபட்டியை சேர்ந்த 55 வயதுடைய விவசாயகூலி தொழில் செய்து வரும் பெண்
தனது பேரன்களுடன் வீட்டில் வசித்து வந்தார்.
அவர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பெரிய கருப்பன் என்பவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து படுத்திருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் கூச்சலிட்டார்.
அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் ஓடி வந்து
தப்பி ஓட முயன்ற பெரியகருப்பனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்
ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் .புகாரின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார்.
பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த பெரியகருப்பனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்