வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிப்பு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊணை வாணியம்பாடி ஊராட்சியில் விஏஓ அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் ரேசன் கடையை ஒரே இடமான ஏரிப்புதூர் பகுதியில் கட்டுவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
ஊணை வாணியம்பாடி பகுதியிலேயே கட்ட கோரியும் சுமார் 80 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அணைகட்டில் இருந்து ஒடுக்கத்தூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தினால் 2 மணி நேரமாக தொடரும் போராட்டத்தால்
பேருந்து மற்றும் வாகனங்களை தற்போது காவல் துறையினர் மாற்று பாதையில் திருப்பி விட்டுள்ளனர்.
மேலும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் பாடப்படுகிறது.