விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள சொரப்பூர் கிராமத்தில் வசிக்கும் ராதா என்பவர் வீட்டிலையே அயனிங் கடை வைத்து நடத்தி வருகிறார். ராதாவின் மகனுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று 30 சவரன் நகையை தீர்வரிசையாக பெற்று வீட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் நகை இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு வீட்டின் பின்பக்க கதவின் தாழ்பாளை இரும்பு கம்பி கொண்டு லாவகமாக உடைத்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது வீட்டிலிருந்தவர்கள் உறங்கி கொண்டிருக்கும்போதே வீட்டின் அறையிலிருந்த பீரோக்களின் சாவியை எடுத்து பீரோவில் இருந்த இருப்பத்தி எட்டரை சவரன் தங்க நகை மற்றும் 9 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிவிட்டி வீட்டில் உறங்கி கொண்டிருந்த பத்மாவதி என்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த நகையை லாவகமாக கழட்டியபோது மூதாட்டி விழித்துகொண்டு திருடன் திருடன் என கத்தியபோது வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வருவதற்குள் வீட்டின் பின்பக்க வழியாக திருடர்கள் தப்பி சென்றுள்ளனர்.
திருட்டு சம்பவம் குறித்து ராதா அளித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரனை செய்து வருகின்றனர். வீட்டில் உறங்கி கொண்டிருந்த போதே நகை திருடபட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.