திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பூளக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (53) இவரது கணவர் ஆறுக்குட்டி. இவருக்கு அதே பகுதியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு குடும்ப கஷ்டத்திற்காகவும் மருத்துவ செலவிற்காகவும் காங்கேயம் பகுதியில் உள்ள அருணாச்சலக் கவுண்டர் என்பவர் இடம் சுமார் 15 லட்சம் ரூபாய் கடனாக பெற்று இருந்தனர்.
கடன் திருப்பி செலுத்தும் வரை எங்களுக்கு சொந்தமான அந்த மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கான ஆவணத்தை வாங்கி வைத்துக் கொண்டார். எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால், அப்பொழுதே பத்திரத்தில் சில இடங்களில் கைரேகை வாங்கிக் கொண்டனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை வாங்கிய கடனுக்கு வட்டிகட்டியும் அசலையும் செலுத்தி வந்துள்ளேன்.
ஆனால் சமீபத்தில் அருணாச்சலம் நிலத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து காலி செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். வாங்கிய கடனுக்கு மேலே அசலையும் வட்டியும் செலுத்திய பிறகும் எனது ஆவணத்தை தர மறுக்கிறார் இது குறித்து விசாரித்த பொழுது எனது அனுமதி இல்லாமல் எனது அறியாமையை பயன்படுத்தி எனது நிலத்தை கிரையம் வாங்கிக் கொண்டார்.
எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத் தர ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பேட்டி.. லட்சுமி