கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள பகுதிகளான காரமடை மற்றும் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கண்டியூர் பணப்பாளையம் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நேந்திரன் காதலி உள்ளிட்ட வாழைகளை பயிர் செய்திருந்தனர்
இந்த நிலையில் நேற்று இரவு காரமடை மேற்கு பகுதியான வெள்ளியங்காடு, கண்டியூர்,சாலை வேம்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது இந்த மழையின் காரணமாக இந்த பகுதிகளில் பயிர் செய்யப்பட்டிருந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் காற்றின் வேகம் காரணமாக முறிந்து சேதமடைந்துள்ளது
நாகராஜ்,பழனிச்சாமிநவீன் ஆகிய விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த 5 நேந்திரன்,கதளி உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் குலைத்தள்ளி அறுவடைக்கு தயாராகி வந்த வாழைகள் முழுவதுமாக சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
ஒரு வாழைக்கு 200 முதல் 250 ரூபாய் வரை செலவு செய்து அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகளுக்கு ஒரே நாள் இரவில் முழுவதும் சேதமடைந்த தால் ஒரு விவசாயிகளுக்கு 8 லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்
எனவே மத்திய மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்