நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் அதிகமாக சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுகிறது குறிப்பாக இரவு நேரங்களில் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளை வேட்டையாட சிறுத்தைகள் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் காவலர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
ஏற்கனவே வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் தொடர்ந்து சிறுத்தைகளின் நடமாட்டம் சிசிடிவியில் பதிவாகி வருகிறது
இன்று நள்ளிரவு நேரத்தில் காவலர் குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை உலா வந்தது இறையைத் தேடி பல பகுதிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை சிசிடிவி காட்சிகள் வெளியாகி காவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
சிறுத்தை மற்றும் கருஞ்சிருத்தை காவலர் குடியிருப்பு பகுதியில் உலா வருவதை வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது .