திருப்பூரில் நேற்று இரவு 8 மணி அளவில் பெய்ய துவங்கிய மழையானது இன்று 6 மணி வரை என பத்து மணி நேரம் வெளுத்து வாங்கியது மழையின் காரணமாக திருப்பூர் மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது
இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டன பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் தற்போது மாநகராட்சி ஊழியர்கள் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ., பெத்திசெட்டிபுரம் ., அதேபோல் அறிவொளி நகர் என மழை நீர் தேங்கிய பகுதிகளில்
தண்ணீரை அப்புறப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மலையின் காரணமாக கடந்த ஒரு வாரமாக இருந்து வந்த வெப்பம் தணிந்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது