வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டம் இயற்றி உள்ளது .
இந்த சட்டம் இஸ்லாமியர்கள் உரிமைகளை பறிப்பதாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திரும்பப் பெற கோரியும் இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.