அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்யக்கோருதல் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கத்தின் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்,
பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் .7வது ஊதியக்குழு நிர்ணயித்ததில் 21 மாத நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பியும் பதவு உயர்வு வழங்க வேண்டும்.


ஊராட்சி உள்ளாட்சிகளில் பணி புரியும் 12,527 நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்
ஊராட்சி உள்ளாட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்