பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மரப்பட்டை வீதி, தேர்நிலையம், கோவை சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலையில் வெள்ள நீரானது பெருக்கெடுத்து ஓடியது. கோட்டூர் சாலை
திருநீலகண்டர் வீதியில் உள்ள நியாய விலை கடையில் தண்ணீர் புகுந்தது கடையில் வைக்கப்பட்டிருந்த அரிசி . பருப்பு,சர்க்கரை மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமானது. இதனால் ஊழியர்கள் செய்வது அறியாது திகைத்து நின்றனர்.
இதே போல் பல்லடம் சாலை நந்தனார் காலனி பகுதியில் சாக்கடைக
கால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக வெள்ளை நீரானது ஆறு போல பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிக்குள் ஓடியது. வீடுகளுக்குள் தண்ணீர் வராமல் தடுக்க பொதுமக்கள் தடுப்புகளை அமைத்து நின்றனர்