திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை மேம்பாலத்தின் மீது நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பழுதடைந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்று அதிகாலை நேரத்தில் சாலையோரம் பழுதடைந்து நின்றிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுய்பால் இடிபாடுகளில் சிக்கி போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி லாரிகளை தனித்தனியாக பிரித்து ஓட்டுனரை மீட்டனர்.
இரண்டு கால்களும் பலத்த சேதமடைந்த நிலையில் லாரி ஓட்டுநர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து காரணமாக சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது