பெண்ணை உதைக்கும் நபரின் குற்ற செயல்கள் குறித்து வாட்சப்பில் பரபரப்பாக வட்டமிடும் செல்ஃபோன் காட்சிகள்
கோவை உருமாண்டம்பாளையம் சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று பிற்பகல் ரம்யா வீட்டிற்கு முன்பு எரிவாயு சிலிண்டர் ஆட்டோ ஒன்று அருகே உள்ள வீட்டிற்கு சிலிண்டர் இறக்குவதற்கு வந்து உள்ளது.
குறுகலான சாலையில் இருந்ததால், ரம்யா வீட்டு அருகே உள்ள இளைஞர் இருசக்கர வாகனம் நின்று இருந்தது. இதனால் அந்த எரிவாயு சிலிண்டர் ஆட்டோ வர முடியாமல் சாலையின் நடுவே நின்றது. இதனைக் கண்ட அந்தப் பெண் ரம்யா. இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் அருகே உள்ள வீட்டின் முன்பு சாக்கடை மேல் போடப்பட்டு இருந்த சிமெண்ட் ஸ்லாப்பில் நிறுத்த கூறி உள்ளார்.
இதனைக் கேட்ட அந்த நபர் என் வீட்டின் உரிமையாளர் சுந்தரராஜன் என்பவர் ஏன் ? எனது வீட்டின் வாசலில் உள்ள ஸ்லாப் மேல் வண்டியை ஏன் நிறுத்த சொல்கிறாய் ? என்று கூறி தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முத்திய நிலையில் அந்தப் பெண்ணை சுந்தரராஜ் மற்றும் அருகில் இருந்த ராஜேஷ் என்ற இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை தாக்கி உள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த எரிவாயு சிலிண்டர் ஆட்டோ ஓட்டுனர் அருண் தடுக்க முயன்றார். அவரையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர் அதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அந்தப் பெண் ரம்யா கூறும் போது தொடர்ந்து இவர் அப்பகுதியில் தகாத வார்த்தைகளால் பேசி அடாவடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் ஏதோ ஒரு அரசியல் கட்சியில் உள்ளதாகவும், மேலும் இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணை தாக்கிய நபர் எல்.ஐ.சி சுந்தரம் என்றும், அவர் எல்.ஐ.சி முகவர்ராக உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது கவுன்சிலர் அப்பகுதியில் கவுன்சிலராக இருந்து உள்ளதாகவும், இப்பொழுது அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக உள்ளதாகவும் தெரிய வருகிறது.