உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்களிடம் தொழில் கடன் வாங்கி தருவதாக கூறி இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை கூடுதலாக பணம் கொடுப்பதாக கூறி வரவழைத்த பெண்கள் அவரை உளுந்தூர்பேட்டை கடை வீதியில் மடக்கிப் பிடித்த போது சாலையில் விழுந்து அலப்பறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது உளுந்தூர்பேட்டை கடைவீதி பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் நகராட்சி பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விசலூர் கிராமத்தைச் சேர்ந்த பானுமதி என்பவர் குடும்பத்துடன் அம்பர்நாத் காந்திநகர் பகுதியில் வசித்துள்ளார்.
அப்போது அந்தப் பகுதியில் பலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன் படுத்திக்கொண்ட பானுமதி கடந்த சில வருடங்களாக சொந்த ஊரான விசலூர் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தனிநபர் கடன் பெற்று தரும் ஏஜெண்டராக உள்ளதாக கூறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உளுந்தூர்பேட்டையை அடுத்த தேன்குணம் கிராமத்தைச் சேர்ந்த அனுசியா என்பவருடன் பானுமதிக்கு பழக்கம் இருந்து வந்ததால் அனுசியாவுக்கு கடன் வாங்கித் தருவதாக கூறி 30,000 பணம் பெற்றுள்ளார்.
மேலும் குழுவாக அமைத்தால் பலருக்கும் பணம் வாங்கி கொடுக்கலாம் என கூறி சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி உள்ளார். மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் கடன் வாங்கி கொடுக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் பானுமதிக்கு பலமுறை போன் செய்துள்ளனர்.
அவர் தனது செல்போனை எடுக்காததால் இன்று காலை கூடுதலாக பணம் கொடுப்பதாக கூறி அனுசியா மூலம் போன் செய்துள்ளார். இதனை நம்பிய பானுமதி இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை வந்துள்ளார். உளுந்தூர்பேட்டை கடை வீதியில் வந்த பொழுது அவரை சுற்றி வளைத்த பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிடிக்க முயன்ற போது திடீரென நடுரோட்டிலேயே உருண்டு புரண்டு திடீரென போராட்டத்தில் இறங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவரை மீட்டு சாலையோரம் கொண்டு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் பானுமதியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை அழைத்து வருகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணம் வாங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பானுமதி சாலையில் படுத்து உருண்டுதால் உளுந்தூர்பேட்டை கடைவீதி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.