
(பெண் குடும்பத்தார் நாவிதர் கன்வெர்ட் கிரிஸ்டியன்.
காதலன் குலாலர் சமூகம். )
திருப்பூர் மாவட்டம் பல்லடத்த்தை அடுத்த பருவாய் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி. கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் . இவர் மனைவி தங்கமணி மகன் சரவணன் மகள் வித்யா உடன் வசித்து வருகிறார்.
வித்யா 22., கோவை அரசு கல்லூரியில் படித்து வந்தார் . இந்நிலையில் வித்யா திருப்பூர் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களின் காதல் விவரம் வீட்டிற்கு தெரியவந்த நிலையில்., வித்யா வின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 30 ம் தேதி
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோ விழுந்ததில் வித்யா உயிரிழந்ததாக கூறி அவரது குடும்பத்தார் வித்யாவின் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்ததாக கூறப்படுகிறது . இது தொடர்பாக தகவல் அறிந்த பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் ., வித்யாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தும் படி
காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பல்லடம் வட்டாட்சியர் தலைமையில்., திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் உதவியுடன் உடலை நேற்று மாலை தோண்டி எடுத்து சுடுகாட்டிலேயே வைத்து பிரத பரிசோதனை செய்தனர்.
இதில் வித்யா தலையில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது உடல் பாகங்களை சோதனைக்காக மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதோடு
பிரேத பரிசோதனை முடிந்தவுடன் சுடுகாட்டுக்கு வெளியே இருந்த வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும் அண்ணன் சரவணன் இருவரையும் விசாரணைக்காக காமநாயக்கன் பாளையம் போலீசார் அழைத்துச் சென்றனர்.
வித்யாவின் தலையில் பலத்த காயம் இருந்தது கொலையா அல்லது விபத்தா என்பது வித்யாவின் உடல் முழுமையான உடற்கூறாய்வு செய்த பின்னரே தெரியவரும் அதன் பின்னரே அறிக்கையானது
போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் தெரிவித்தனர்
இதனிடையே இன்று போலீசார் திவ்யாவின் தாய் தந்தை மற்றும் அவரது மகனிடம் நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில்
தனது தங்கையிடம் பலமுறை காதலை கைவிடுமாறு தெரிவித்த நிலையில் அவர் காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் தற்போது போலீசார் வித்யாவின் அண்ணன் சரவணனை கைது செய்ததோடு வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும் தாய் தங்கமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்