உடனடியாக கீழே இறங்கியதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பினர்
சிஆர்பிஎஃப் உதவி கமாண்டண்டாக பணி புரிபவர் டி.ரத்னம்.
இவர் ஆந்திர மாநிலம்
கர்னூலில் உள்ள வீட்டில் இருந்து ராஜமுந்திரிக்கு பணிக்காக காரில் சென்று கொண்டிருந்தார். இவரது கார் கிழக்கு கோதாவரி மாவட்டம், நல்லஜர்லா மண்டலத்தில் உள்ள வீரவள்ளி டோல் பிளாசா அருகே சென்றபோது காரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடிரென தீ பிடித்து கொண்டு எரிய தொடங்கியது. காரில் இருந்தவர்கள் உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டோல்பிளாசா ஊழியர்கள் தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயன்றும் தீ வேகமாக பரவியது.
இந்த தீ விபத்தில் கார் முற்றிலுமாக எரிந்தது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் தகவல் அறிந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
நல்லஜர்லா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். காரில் இருந்த சிஆர்பிஎஃப் உதவி கமாண்டண்ட்
டி.ரத்னம் மாற்று கார் வரவழைத்து ராஜமுந்திரிக்கு புறப்பட்டு சென்றார்.