திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினா் அலுவலக கட்டிடம் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரா் கோவில் பகுதியில் கட்டப்படுகிறது. இதற்காக ரூ.1.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் புதிய சட்டமன்ற உறுப்பினா் அலுவலக கட்டிடத்திற்கான பூமிபூஜை நடந்தது. இதில் மாவட்ட கலெக்டா் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தனா்.


நிகழ்ச்சியில் தெற்கு மாநகர செயலாளா் டி.கே.டி.மு.நாகராஜன், துணை மேயா் பாலசுப்பிரமணியம் மற்றும் பகுதி செயலாளா்கள் மேங்கோ பழனிச்சாமி, மு.க.உசேன், மின்னல் நாகராஜ், கவுன்சிலா்கள் செந்தூர் முத்து, பி.ஆர்.செந்தில்குமார், திவாகா் மற்றும் மாவட்ட துணைச்செயலாளா்கள் வக்கீல் குமார், நந்தினி, மாநகர மாணவரணி அமைப்பாளா் திலகராஜ், மகளிர் அணி அமைப்பாளா் கலைச்செல்வி, தொகுதி பொறுப்பாளா் மாலதி. ஒன்றிய செயலாளர்கள் சோமசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலா் பங்கேற்றனா்.