https://youtu.be/ygzYkIYjh-Q

திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சடையப்ப சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளத. திருப்பூர் மாநகரில் பிரசித்தி பெற்ற கோவிலில் 46 ஆம் ஆண்டு யுகாதி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ கன்னிமார் சாமி ஸ்ரீ கருப்பண்ண சாமிக்கு அபிஷேக ஆராதனை விழாவும் அதனை தொடர்ந்து குலாலர் ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் ஒரு பகுதியாக காலை சிறப்பு கணபதி ஹோமம் நடைபெற்றத. அதனை தொடர்ந்து மகளிர் உள்ளிட்ட ஏராளமான பால்குடம் , தீர்த்த குடம் , முளைப்பாரி எடுத்து கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து ஸ்ரீ சடையப்பன் கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

இதனைத் தொடர்ந்து சடையப்பன் கோவிலில் உள்ள கன்னிமார் சாமி மற்றும் கருப்பணசாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது இந்நிகழ்வுகளை முன்னிட்டு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

யுகாதி பண்டிகை முன்னிட்டு திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.