2021 தேர்தல் முடிந்த பிறகு அதிமுக வின் தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் பாஜக உடனான கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார் அதிமுக வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக வின் மறைந்த தலைவர்களை , அண்ணாமலை கொச்சைப்படுத்தியதை கூட பாஜக மேலிடம் கண்டிக்கவில்லை என்ற காரணத்தை இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு சொன்னார் எடப்பாடி பழனிசாமி.

பாஜக் உடன் கூட்டணி வைத்த காரணத்தால் மட்டுமே நான் தோற்றேன் என ஜெயக்குமார் ஆரம்பித்து , அதிமுக வின் மூத்த தலைவர்களும் , பாஜக வின் தலைவர்களும் மாறி மாறி வசைபாடிக்கொண்டனர். 2024 தேர்தலில் அதிமுக , பாஜக என யாருக்கும் எந்த பயனும் இல்லாத வகையில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.

2024 தேர்தல் முடிவிற்கு பிறகு இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்திருந்தால் 10 தொகுதிகளை கைப்பற்றி இருக்கலாம் என்ற வகையில் இரு கட்சிகளுக்கும் உள்ளாகவே மேலோங்கியது. பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் , எக்காலத்திலும் இனி பாஜக உடன் கூட்டணி இல்லை என மறுத்த எடப்பாடி பழனிசாமி , தனது சகாக்களுடன் சட்டப்பேரவை நடந்துகொண்டிருக்கும் போதே டெல்லி பறந்தார்.

புதிதாக திறந்த அதிமுக அலுவலக கட்டிடத்தை பார்வையிட வந்துள்ளேன் என கூறியவர் , அன்று இரவே உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். சந்திப்பிற்கு பிறகு 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என அமித்ஷா ட்வீட் செய்திருந்தார்.

அதிமுக பாஜக இடையிலான கூட்டணி முடிவாகிவிட்டது என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து கூறி வரும் நிலையில் , திடீரென நேற்று டெல்லி பறந்துள்ளார் முன்னாள் அமைச்சரும் அதிமுக வின் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன். 35 நிமிடங்கள் வரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

என்ன தான் எடப்பாடி பழனிசாமி அதிமுக பாஜக கூட்டணிக்கு ஒத்துக்கொண்டிருந்தாலும் , பாஜக விதித்த சில நிபந்தனைகளை ஏற்பதில் சிக்கில் இருப்பதை பாஜக தலைமையும் நன்கு உணர்ந்துள்ளது. அதனால் , எடப்பாடி க்கு நிகராக இரண்டாவது சாய்ஸ் ஆக செங்கோட்டையனும் தயார் செய்து வைக்கிறதா டெல்லி பாஜக தலைமை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.