திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் கலைச்செல்வி தம்பதியின் மகள் காவியா(26) என்பவரை கடந்த 2020 ம் ஆண்டு கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் ஜெயச்சித்ரா தம்பதியரின் மகன் தியாகராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு 65 சவரன் நகை காவியாவிற்கு வழங்கப்பட்ட நிலையில் அதன்பிறகு அவ்வப்போது கணவர் வீட்டார் கேட்கையில் 15 சவரன் நகை கொடுத்துள்ளனர். மேலும் மாமியார் மற்றும் கணவர் தினசரி திட்டி வந்ததாகவும், வேலைக்காரியை போல பயன்படுத்தி வந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்த காவ்யா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீடு துடைக்க பயன்படுத்தும் லைசால் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளார். தொடர்ந்து தனது பெற்றோரிடம் கணவர் வீட்டார் தன்னை கொடுமை படுத்துவதாகவும் தன்னை அழைத்துச் சென்று விடும்படி தெரிவித்துள்ளார். ஆனால் காவியாவின் பெற்றோர் சமாதானம் கூறி வந்துள்ளனர். இந்நிலையில் மனமுடைந்து இருந்த காவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவியாவின் பெற்றோர் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் நடைபெற்ற 5 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.