வேலூரில் தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பெண் குழந்தைகள் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெண் காவலர்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் கலந்துகொண்டார் இப்பேரணியானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று வேலூர் கோட்டை காந்தி சிலையின் அருகில் நிறைவடைந்தது.