திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதிகளில் போதை பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவதாக எழுந்த புகாரை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதில் தங்கும் விடுதி ஊழியர்கள் மட்டும் அல்லாது வாடிக்கையாளர் களையும் போலீசார் தொடர்ந்து விசாரணை என அலைகழிப்பதால் தங்கும் விடுதிகளில் வாடிக்கையாளர் வருகை குறைந்து விட்டதாகவும், பனியன் நிறுவனங்களை சேர்த்த வெளிநாடு மற்றும் பிற மாநில வணிகர்கள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இவர்கள் அதிக அளவில் பணம் கொண்டு வரும் நிலையில் போலீசார் சோதனை என்பதால் அச்சப்படும் நிலை ஏற்படுவதாகவும், அதே போல் விசேஷ காலத்தில் தங்கும் நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிப்பு மற்றும் விசாரணை காரணமாக வாடிக்கையாளர்கள் தங்கும் விடுதிகளை தவிர்ப்பதால் 70 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டு தொழில் நலிவடைந்து வாழ்வாதாரம் பாதிப்படைவதால் காவல் துறைக்கு முறையான ஒத்துழைப்பு வழங்கும் தங்கள் தொழில் பாதிக்காத வகையில் சோதனைகள் நடத்த வேண்டும் என திருப்பூர் லாட்ஜிங் ஹோட்டல் உரிமையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சங்க தலைவரும் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் (இந்திய கம்யூனிஸ்ட்) பாலசுப்ரமணியமும் லாட்ஜ் வைத்து நடத்தி வரும் நிலையில் சங்கத்தின் தலைவராகவும் உள்ளதால் அவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

பேட்டி:

பாலசுப்பிரமணியம் (தலைவர்) மாநகராட்சி துணை மேயர்

அன்பகம் திருப்பதி செயற்குழு உறுப்பினர்