செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் தனித்துறை வேண்டும் பொட்டல முறை கொண்டு வர வேண்டும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மற்றும் எடை மெஷினுக்கும் பாஷ் மெஷினுக்கும் ப்ளூடூத் மூலம் இணைப்பு ஏற்படுததுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதாகவும்இதனால் காலதாமதம் மற்றும் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் ஆகவே இதனை கைவிடக் கோரியும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 840 நியாய விலை கடைகளில் 350 கடை பணியாளர்கள் அரசுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்தும் பேட்ச் அணிந்தும் காலை முதல் நியாய விலைக் கடைகளில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு பணிபுரிந்து வருகின்றனர்
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை மற்றும் பேட்சு அணிந்து அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் அறவழி போராட்டம்
