சீர்காழி அருகே சொகுசு மினிவேன் கவிழ்ந்து விபத்து .11 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்
சிசிடிவி காட்சி உள்ளது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் நான்கு வழி சாலையில் சொகுசு மினி வேன் கவிழ்ந்து விபத்து. திருச்சி மண்ணச்சநல்லூரில் இருந்து திருக்கடையூரில் நடைபெறும், 60 ம் கல்யாணத்திற்கு சென்று கொண்டிருந்தனர் அப்போது புத்தூர் புறவழிச்சாலையில் ஆனந்தகூத்தன் கிராமத்தில் மினி வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இதில் மண்ணச்சநல்லூரை சேர்ந்த பத்மா, ராஜேந்திரன், ரமேஷ், ரவி, பாரி, செல்வகுமார் உள்ளிட்ட 11 பேர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர்
இது தொடர்பாக கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்