நுரை தழும்ப சாக்கடை வழியாக காவிரி ஆற்றில் கலக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சாய,சலவை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. ஒரு சில சாயப்பட்டறை நிறுவனங்கள் சாய தண்ணீரை சுத்திகரிக்க படாமல் மறைமுகமாக பைப் லைன் அமைத்து சாக்கடை வழியாக சாயத்தண்ணீரை வெளியேற்றுவதால் அது நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து அதை பயன்படுத்தும் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் உண்டாகிறது.
குறிப்பாக புற்றுநோயால் இப் பகுதி சேர்ந்த பொதுமக்கள் பாதிப்புள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் ஒட்ட மெத்தை பகுதியில் செயல்படும் சாயப்பட்டறையில் இருந்து இரவு பகல் பாராமல் சாயகழிவு தண்ணீரை சுத்திகரிப்பு செய்யாமல் சாக்கடை வழியாக தினசரி வெளியேற்றி வருகின்றனர். அதை அப்பகுதி வழியாகச் சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார் தற்பொழுது அந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.